/* */

நில முகவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

HIGHLIGHTS

நில முகவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
X

குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

நாமக்கல் மாவட்ட நில முகவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதிய தலைவராக சக்தி, செயலராக சந்திரசேகரன், பொருளராக குணசேகரன், துணை செயலராக விடியல் பிரகாஷ், செயற்குழு உறுப்பினராக செல்வராஜ் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க ஆலோசராக நலவாரியம் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு நில முகவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரவித்தனர்.

குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லை, ஆகவே, பொதுமக்களுக்கு தேவையான இருக்கைகள் அமைக்க வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் அங்கு கழிப்பிட வசதி இல்லாமல் தவிப்பதால், அங்கு பொதுமக்களுக்கு கழிப்பிடம் அமைக்க வேண்டும், மேலும் மின்விசிறி வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நில முகவர்கள் சங்கம் ஏற்கனவே ஒன்று இருக்கும் நிலையில் இது இரண்டாவது சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 July 2023 4:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்