/* */

எதிர்ப்பு சக்தி தரும் அசோலாவை கோழிகளுக்கு வழங்க கோரிக்கை

Antioxidant Azola Request to provide chickens

HIGHLIGHTS

எதிர்ப்பு சக்தி தரும் அசோலாவை  கோழிகளுக்கு வழங்க கோரிக்கை
X

எதிர்ப்பு சக்தி தரும் அசோலாவை கோழிகளுக்கு வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம்., குமாரபாளையம் அருகே புதிதாக கோழிகளுக்கு பரவும் நோயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதிக புரத சத்து கொண்ட அசோலாவை அரசு கொடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது::குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிகளுக்கு கழுத்து பகுதியில் புள்ளிகளாக, வீக்கமாக உள்ளது. அதிக எடை கொண்ட கோழிகள் கூட சில நாட்களில் மிகவும் எடை குறைந்து விடுகிறது என அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டனர். அரசால் வழங்கப்படும் அசோலா அதிக புரத சத்து மிக்கது. இதனை கோழிகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Updated On: 2 July 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?