நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள் தமிழில்!

One Sided Love Quotes Tamil -ஒரு தலைக்காதலால் இங்கு உடைந்து, சிதிலமடைந்த இதயங்கள் மிக அதிகம் (மாதிரி படம்)
One Sided Love Quotes Tamil -காதலில் வலிமிகுந்த நாட்கள் என்பது காதலியின் அன்பை பெற முடியாமல் ஒரு பக்க காதலில் அந்த கடினமான, துயரமான நாட்களை கடப்பதுதான். பலரது காதல் ஒரு தலை ராகமாகவே இருந்து, வாழ்க்கையின் கடைசி வரை காதலிக்கோ, காதலனுக்கோ தெரிவிக்கப்படாமல் முடிந்து போய் விடுகிறது. காதலை சொல்ல முடியாமல், சொன்னால் நிராகரிக்கப்படுமோ என்ற வேதனையில், கவலையில் சொல்லாமலேயே முடிந்து போன ஒரு தலை காதல் ஏராளம்... ஏராளம்!
ஒற்றைப் பூவை கையில் ஏந்தி.. ஓர் அடி முன் சென்று.. ஓரிரு வார்த்தைகள் பேசி முடிப்பதற்குள்.. ஓராயிரம் முறை செத்து பிழைக்கிறேன்.. ஒரு தலைக் காதலால்..!
உன்னையே ஒரு உறவு சுற்றி சுற்றி வருகிறது என்றால்.. அது போவதற்கு வேறு இடமில்லாமல் இல்லை.. உன்னை இழக்க மனமில்லாமல் தான்..!
இன்று நீ என்னை புரிந்து கொள்ளவில்லை.. நாளை நீ என்னை புரிந்து கொள்ளும் போது நான் இல்லாமல் போகலாம்..!
ஒரு தலை தான் என் காதல்.. ஒரு உயிர் தான் என் ராகம்.. உன் மனம் தான் என் உறுதி.. உன்னிடம் தான் என் இறுதி..!
வாழ்க்கையில் சிலரை மறக்க முடியாது.. சிலரை பிரிய முடியாது.. மறக்காமல் நீ இருந்தால் பிரியாமல் நான் இருப்பேன்..!
நிம்மதியற்று திரிவேன் என்று தெரிந்திருந்தால்.. உன்னை திரும்பிக் கூட பாத்திருக்க மாட்டேன்..!
இந்த உலகில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்கு அடிமையாக இருக்கிறார்கள்.. “நானும் அடிமை தான்” என்னவளின் அழகிற்கு..!
நாட்கள் நகரும் போது ஆயுட்காலம் குறையலாம்.. ஆனால்.. எனக்கு உன் மீது உள்ள காதல் ஒரு போதும் குறையாது..!
ஒரு உண்மைக் காதலை கிடைக்கும் பொழுது தவறவிட்டால்.. தேடும் போது கிடைக்காது..!
நடுக்கடலில் கப்பல் தான் கவிழும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.. உன்னைப் பார்த்த பிறகு நானும் கவிழ்ந்தேன்.. கடலில் அல்ல.. உன் அழகில்..!
உன் பார்வையில் தொலைந்தது நான் மட்டுமல்ல.. என் கோபங்களும் தான்..!
தூரத்தில் நீ இருந்தாலும்.. என் பார்வை உன்னைத் துரத்திக் கொண்டே தான் இருக்கும்.. என் இதயத்தின் துடிப்பு நிற்கும் வரை..!
சிலரை பிடிக்காது என்றாலும் வெறுக்க முடியாது.. சிலரை பிடிக்கும் என்றாலும் நெருங்கிட முடியாது.. புரிதல் ஒன்றே அன்பை உணர்த்தும்..!
நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்.. என்னால் பேச முடியாமல் இருந்தாலும்.. என்றும் நான் உன் மீது கொண்ட காதல் மாறாது..!
உன் நினைவு எழும் போதெல்லாம் அழிக்க முயல்கிறேன்.. நினைப்பதும்.. அழிப்பதும்.. மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது எனக்கு..!
எவ்வளவு தான் மனது காயப்பட்டாலும் நாம் நேசித்த ஒரு இதயத்தை மட்டும் என்றுமே நம்மால் மறக்கவும் முடியாது.. வெறுக்கவும் முடியாது.. அது தான் உண்மையான காதல்..!
உன்னை நினைக்க நினைக்க தான் உன் மீது வைத்துள்ள என் காதல் எவ்வளவு சுகமானது என்று புரிகின்றது..!
நீ பார்த்த பார்வையில் பற்றிக் கொண்ட நெருப்பு நான், அணையாமல் எரிந்து கொண்டே இருப்பேன் திரும்பி வந்து நீ அணைக்கும் வரை..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu