/* */

திருக்குவளையில் கருணாநிதியின் 98, வது பிறந்தநாள் விழா : அவரது இல்லத்தில் திமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா திருக்குவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருக்குவளையில் கருணாநிதியின் 98, வது பிறந்தநாள் விழா : அவரது இல்லத்தில் திமுகவினர்  மரியாதை
X

திருக்குவளையில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு நாகப்பட்டினம் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முன்னாள் தலைவரும். தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, கருணாநிதியின் 98,வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதைப்போல் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளையில் அவரது 98,வது பிறந்த நாள் விழாவினை திமுகவினர் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதியின் தாய், தந்தையான முத்துவேலர் அஞ்சுகத்தம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, திமுக கட்சி கொடி ஏற்றிவைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 3 Jun 2021 8:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  4. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  8. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...