/* */

நாகையில் முதல்வருக்கு மேளம் அடித்து நன்றி தெரிவித்த பழங்குடி இன மக்கள்

நாகை அவுரி திடலில் பழங்குடி இன மக்கள் மேளம் அடித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நாகையில் முதல்வருக்கு மேளம் அடித்து நன்றி தெரிவித்த பழங்குடி இன மக்கள்
X

நாகையில் பழங்குடியின மக்கள் தமிழக முதல்வருக்கு மேளம் அடித்து நன்றி தெரிவித்தனர்.

இருளர் இன மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சனையை ஆழமாக பேசி சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற 31 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்கவும், சாதி சான்றிதழ்கள் வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில், செல்லூர், பொறக்குடி, நீலப்பாடி பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். அப்போது தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொட்டடித்து தங்களுடைய மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

அம்பேத்கர், தமிழக முதல்வர், நடிகர் சூர்யா ஆகியோரின் பதாகைகளோடு கூட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின மக்கள், ஜெய் பீம் திரைப்படம் மூலம் பழங்குடியின மக்களின் உரிமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Updated On: 7 Dec 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி