/* */

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விபத்தில் உயிரிழப்பு

நாகை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விசைப்படகின் ரோப் கம்பி நெஞ்சில் அடித்து பரிதாபமாக உயிரிழப்பு .

HIGHLIGHTS

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விபத்தில் உயிரிழப்பு
X

உயிரிழந்த மீனவர் பாவாடைசாமி

கடந்த 1 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் கீழ மூவர்க்கரை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை நாகையில் இருந்து 15 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீன்வலைகளை இழுக்க பயன்படும் விசைப்படகின் ரோப் கம்பி அறுந்து மீனவர் பாவாடைசாமியின் நெஞ்சில் அடித்ததில் அவர் படகிலேயே சுருண்டு விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் படுகாயமடைந்து மூச்சு பேச்சில்லாமல் கிடந்த மீனவர் பாவாடை சாமியை நாகை துறைமுகம் கொண்டு வந்துள்ளனர்.


பின்னர் துறைமுகத்தில் இருந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த மீனவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். நடுக்கடலில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ரோப் கம்பி நெஞ்சில் அடித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் உயிரிழப்பு குறித்து நாகை கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 4 Oct 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  7. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  9. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  10. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!