/* */

இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் மோடி கைக்குள் : விசிக விமர்சனம்

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மோடியின் கைப்பிடிக்குள் உள்ளனர் என்று திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் விமர்சனம் செய்தார்.

HIGHLIGHTS

இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் மோடி கைக்குள் :  விசிக விமர்சனம்
X

அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை எடப்பாடியிடமும், ஒரு இலை ஓ.பி.எஸ் இடமும், நடுவில் உள்ள காம்பு மோடியிடமும் உள்ளது ; நாகையில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் பேச்சு.

நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றிபெற செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில் ,' நாகை தொகுதியில் எதிர் தரப்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவில் பல கோடி சொத்து மதிப்பை காட்டியுள்ளார். நான் தெருக்கோடியில் நிற்கிறேன். என்னிடம் பணம் இல்லை. நான் உங்களை நம்பியே உள்ளேன். அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் ஒரு இலை எடப்பாடி பழனிச்சாமி. மற்றொரு இலை ஓ .பன்னீர்செல்வம். நடுவில் உள்ள காம்பு மோடி. அவர்தான் அதிமுகவை தாங்கிப்பிடித்துள்ளார்.' என்று விமர்சித்தார்.

Updated On: 24 March 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...