/* */

அதிமுக ஆட்சியில் மாணவர்கள் தற்கொலை - கனிமொழி

அதிமுக ஆட்சியில் மாணவர்கள் தற்கொலை - கனிமொழி
X

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது அதிமுக அரசு என நாகையில் கனிமொழி எம் பி பேசினார்.

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ்க்கு ஆதரவாக கனிமொழி எம்பி., நாகூரில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்: இனிவரும் காலங்களில் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும் தான் இனி மருத்துவ படிப்புகள் படிக்க முடியும் என்ற நிலையை பாஜக உருவாக்கியுள்ளது. சாமானிய வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ கல்லூரியை உருவாக்கியவர் கருணாநிதி எனவும், அந்த கனவு நிறைவேறாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது அதிமுக அரசு எனவும், கூறினார்.

தமிழகத்தையே அடகு வைத்த இவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. காரணம் குற்றவாளிகள் அனைவரும் அதிமுகவினர் என்றும், இந்த ஆட்சியில் யாரும் கேள்வி கேட்க முடியாது. தூத்துக்குடியில் கேள்வி கேட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் அதிமுக ஆட்சியின் அராஜகம் எனவும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் நிறுத்தப்படும் என மத்தியில் கையெழுத்து போட்டுள்ளனர். இதனை தடுக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கனிமொழி கூறினார்.

Updated On: 27 March 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்