/* */

ஓசூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல்..! அபராதம் விதிப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் தொழில் நகரமாக விளங்குவதுடன் பெங்களூருக்குச் செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது.

HIGHLIGHTS

ஓசூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல்..! அபராதம் விதிப்பு..!
X

krishnagiri news tody, krishnagiri news, Hosur news today, Hosur over loaded lorries seized, Krishnagiri RTO officers, M sand lorries

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 9 லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், கிருஷ்ணகிரி ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் செக்போஸ்ட் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணி ஆகியோர் கொண்ட குழுவினர் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் எட்டுப்பட்டிருந்தனர்.

அப்போது ஓசூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்ற 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 9 லாரிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் அதிக பாரம் ஏற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த லாரிகளை அபராதமாக ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் விதித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் முக்கிய நுழைவு வாயிலாக இருக்கிறது. குறிப்பாக பெங்களூரு ஓசூருக்கு அருகில் இருப்பதால், மணல் போன்ற கட்டிட கட்டுமான பொருட்களை லாரிகளில் அதிக பாரமேற்றி செல்கின்றனர். இதனால் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து அலுவலர்கள் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வார்கள்.

Updated On: 10 July 2023 10:05 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்