/* */

சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்

HIGHLIGHTS

சிவராத்திரியையொட்டி  மயான கொள்ளை திருவிழா
X

காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி, மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சை பழங்களை குத்தியும் ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளிவேடம் அணிந்து ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அலகு குத்திக்கொண்டு மயானம் செல்லுதல் நிகழ்ச்சியும், திருத்தேரில் அம்மன் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊா்வலமாக காவேரிப்பட்டணத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்துக்கு வந்தது. விழாவில் பக்தா்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய நிலையில் தேரில் வந்த அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, பெங்களூரு, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 12 March 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!