/* */

கிருஷ்ணகிரி உள்ளாட்சி தேர்தல்: 2 நாட்களில் 3 பேர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 நாட்களில் 3 பேர் வேட்புமனு தாக்கல்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி உள்ளாட்சி தேர்தல்: 2 நாட்களில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 30 உறுப்பினர் பதவி ஒன்றுக்கும், நல்லூர், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதே போல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் காலியாக உள்ள 18 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 15ம் தேதி துவங்கியது. முதல் நாளான நேற்று 15ம் தேதி சூளகிரி ஒன்றியம் பி.குருபரப்பள்ளி ஊராட்சி வார்டு எண்.1க்கு ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இரண்டாவது நாளான இன்று (16ம் தேதி) சூளகிரி ஒன்றியம் தோரிப்பள்ளி ஊராட்சி வார்டு எண்.3க்கு ஒருவரும், ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சி வார்டு எண்.1க்கு ஒருவரும் என 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!