/* */

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார்

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து  கொள்முதல் செய்வதாக விவசாயிகள்  புகார்
X

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட மாங்காய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் காரணமாக மா விளைச்சல் குறைவு - மாம்பழக்கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு மா கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 54,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் மாவட்ட முழுவதும் மா சாகுபடி செய்யப்படுகிறது, இதில் சுவை மிகுந்த செந்தூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மல்கோவா, பெங்களூரா, காதர், சர்க்கரை குட்டி, நீலம், போன்ற பல்வேறு ரகங்களில் மாங்கனிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் மா சாகுபடி கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றம் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு வறட்சியால் மகசூல் குறைந்துள்ள நிலையில் விலை சற்று அதிகரித்து இருந்தது. மாம்பழச்சாறு ஆலைகள் விவசாயிகளிடம் மா கொள்முதல் செய்து விற்பனை செய்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக இந்த ஆண்டு மா மரங்களில் பூக்கள் அதிகரித்து இருந்தது. இதனால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்து நிலையில், பூச்சி தாக்குதலால் மாம்பூக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது மருந்துகள் அடித்தும் எந்த பயனும் இல்லை இதனால் இந்த ஆண்டு 90% மா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் வால்பேன் எனப்படும் ஒரு வகையான பூச்சி மா இலைகளையும் மா பூக்களையும் தாக்குவதால் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 சதவீத மாங்காய் மட்டுமே உள்ளது. அந்த பத்து சதவீதத்திலும் தற்போது பெய்த மழையின் காரணமாக ஆலங்கட்டிகள் விழுந்ததில் இரண்டு சதவீதம் மாங்காய்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில்,மாவட்டத்தில் 74 பழச்சாறு ஆலைகள் இருந்த நிலையில் தற்போது 24 ஆலைகள் மட்டும் இயங்குகிறது இதில் பலர் ஆலை உரிமையாளர்கள் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ,ஒரு டன் மங்காங்காய் 13,000 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது இதனால் ஏக்கருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். ஆகையால் மா விவசாயிகளின் நஷ்டத்தினை போக்கிடும் வகையில் தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கிட முன்வரவேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 25 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து