/* */

கிருஷ்ணகிரி: வீடுகளிலேயே பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

கொரொனா காரணமாக, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: வீடுகளிலேயே பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
X

கொரொனா தொற்று காரணமாக, கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள், அவரவர் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அன்பையும் தியாகத்தையும் வெளிக்காட்டும் விழா பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார், தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக, ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையிலும், ஈகை திருநாளில் பலி தருதல் என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகும்.

அவ்வகையில் இன்று அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து கொடுத்து இஸ்லாமியர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். கொரோனா தொற்று காலம் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று மசூதிகளில் தொழுகையில் ஈடுபடாமல், அவரவர் வீடுகளிலேயே தொழுகை மேற்கொண்டனர். பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

Updated On: 21 July 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  9. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  10. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!