/* */

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சென்னையில் நடக்கிறது.

HIGHLIGHTS

ராஷ்ட்ரிய  இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு
X

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி சென்னையில் நகரில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும்நே்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, டேராடூன் டெல்பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு எண். 01576) செலுத்தத்தக்க வகையில் பொது பிரிவினர் ரூ. 600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியி வகுப்பினர் ரூ. 555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.இணைய வழி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது-.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து (இரட்டையாக), தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை & 600003 என்ற முகவரிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?