/* */

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை

முதலமைச்சரின் ரூ.5 லட்சம் பரிசை பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என, வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

முதல்வரின் ரூ.5 லட்சம் பரிசு பெற விவசாயிகள் முயல வேண்டும்: வேளாண்துறை
X

இது குறித்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 7200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான விவசாயிகள் கூடுதல் சாகுபடி விளைச்சல் தரும் தொழில்நுட்பமான "செம்மை நெல்" சாகுபடி செய்யும் முறையை பின்பற்றுகின்றனர்.

தற்போது, செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, முதலமைச்சரின் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் ரொக்க பரிசும், ரூ 7 ஆயிரம் மதிப்பில் பதக்கம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு மற்றும் பதக்கத்தை பெற கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும்.

இந்த பரிசு தொகையை பெற, செம்மை நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறும் விவசாயியாக இருக்க வேண்டும். இந்த விருதினை பெற நெல் நடவு செய்து பு5 நாட்கள் கழித்து, ரூ.150 பதிவு கட்டணம் செலுத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரசீது பெற வேண்டும். விவசாயியின் பெயர், முகவரி, நெல் ரகம், பயிரிடும் பரப்பு, உத்தேச அறுவடை தேதியுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுக வேண்டும்.

அறுவடை சமயத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட தலைமை அதிகாரி வேளாண்மை இணை இயக்குநர் பதவி அளவில் வேறு மாவட்டத்தில் இருந்து பதிவு செய்த விவசாயியின் வயலில் "அறுவடை பரிசோதனை" மேற்பார்வையிடுவார். இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் தேர்தெடுக்கப்பட்டு மாநில போட்டிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட மகசூல் விவரங்கள் ஆய்வு செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு முதல்வரால் ரூ.5 லட்சம் ரொக்க பரிசும், ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள விருதும் வழங்கப்படும்.

எனவே, செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் பின்வரும் உதவி வேளாண் அலுவலர்களை தங்கள் பகுதி வாரியாக அணுகலாம். கிருஷ்ணகிரி, கொத்தபேட்டா, கல்லுகுறிக்கி, பையனப்பள்ளி, போகனப்பள்ளி, வெங்கட்டாபுரம், பெத்ததாளப்பள்ளி பகுதி விவசாயிகள் சென்னகேசவன் &- 6381814131, கூலியம், செம்படமூத்தூர், மாதேப்பட்டி, தானம்பட்டி, பெல்லம்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி, கொண்டேபள்ளி, திப்பனப்பள்ளி விவசாயிகள் புஷ்பாகரன் & 9976447470, அணுகலாம்.

அதேபோல், மகாராஜகடை, கோதிகுட்டலப்பள்ளி, எம்.சி.பள்ளி, நாரலப்பள்ளி, பெத்தனப்பள்ளி, கம்மம்பள்ளி விவசாயிகள் விஜயன் & 8838343514, ஆலப்பட்டி, சிக்கபூவத்தி, வெலகலஅள்ளி, பெரியமுத்தூர், அகரம், கங்கலேரி, மரிக்கம்பள்ளி விவசாயிகள் முத்துசாமி & 9443363925, தேவசமூத்திரம், அகசிப்பள்ளி, பெல்லாரம்பள்ளி, சோக்காடி, மோரமடுகு விவசாயிகள் சிவராசு & 9965611528, வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா & 9442559842, வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் & 8526809678 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 16 July 2021 5:03 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்