/* */

விதிமுறைகள் மீறி எருது விடும் விழா நடத்தினால் நடவடிக்கை: விலங்குகள் நல வாரியம்

அரசு விதிமுறைகளை மீறி எருது விடும் விழா நடத்தினால் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விதிமுறைகள் மீறி எருது விடும்  விழா நடத்தினால் நடவடிக்கை: விலங்குகள் நல வாரியம்
X

ஜல்லிகட்டு மற்றும் எருது விடும் விழா குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைப்பெற்றது.

அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு எருது விடும் விழா நடத்தப்பட வேண்டும் : விதிமுறைகள் மீறி நடத்தினால் நடவடிக்க

கிருஷ்ணகிரி மாவடத்தில் ஜல்லிக்கட்டு மற்றும், எருது விடும் விழா நடத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக்

கூட்டத்தின் போது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் விழா நடத்தப்பட வேண்டும், இதனை மீறி விழா நடத்துபவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் விலங்குகல் நவாரிய அலுவலர் மிட்டல் எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால் தடைப் பரமாரிப்பு துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், மாவட்ட காவல்துறை இணைந்து கிருஷ்ணரி மாவட்டத்தில் ஜல்லிகட்டு மற்றும் எருது விடும் திருவிழாக்களில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி நடத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைப்பெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டித் தலைமமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் ஆகியோர் கலந்துக்கொண்டு பாதுகாப்பான முறையில் எருதுவிடும் விழா நடத்துவது குறித்து விளக்க உரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தின்போது தமிழக அரசு வெளியிடப்படுள்ள கொரோனா தடுப்பு முறைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். எருதுவிடும் விழாவில் 150 பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விழா நடக்கும் இடங்களில் இரட்டை அடுக்கு தடுப்பு அரண் அமைத்துதான் விழாக்கள் நடத்தப்பவேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே எருதுகள் ஓட அனுமதி வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய விலங்கியல் நல வாரிய உறுப்பினர் மிட்டல், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் விழா நடத்தப்பட வேண்டும். இதனை மீறி விழா நடத்துபவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதில் எருது விடும் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம், மாவட்டப்பொருலாளர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்