/* */

சமூக இடைவெளி? அப்படின்னா என்ன?

அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால், அரசின் முயற்சிகள் பலனற்றுப் போகும் நிலை

HIGHLIGHTS

சமூக இடைவெளி? அப்படின்னா என்ன?
X

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நடைமுறை படுத்துகிறது. குறிப்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் முழுவதும் இதன்படி, மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவையில் விற்பனை நடைபெறுகிறது.

ஆனால், மிக அதிக அளவில் பொதுமக்கள் கூடும்போது, சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்படவில்லை எனவே அரசின் முயற்சி அனைத்தும் பலனற்றுப் போகும் நிலை உள்ளது. தமிழகம். முழுவதுமே காய்கறி மார்க்கெட் உழவர் சந்தை போன்ற இடங்களில் இதே நிலைமையே உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலின்போது, முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை முற்றிலும் மூடப்பட்டன. சில்லரை வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து காய்களை வாங்கி வாகனம் மூலம் வீதி வீதியாக சென்று விற்றனர். இதுபோன்ற ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே தமிழக அரசின் ஊரடங்கு பலன் கிடைக்கும் வைரஸ் பரவலை கட்டுபடுத்த முடியும் என தெரிவித்தனர்.

Updated On: 18 May 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!