/* */

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
X

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83,63,318-ம், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52,13,766-ம் என மொத்தம் ரூ.1,35,77,584 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம். பரிசுப்பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையான ஆய்வுக் குழுவினரும் கழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று 29.03.2024 கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 1 வாகனத்தில் ரூ.32084/-, குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் ரூ.92960/- என 2 வாகனங்களில் மொத்தம் ரூ.4,13,800/- பறக்கும் படைகள் மூலமாகவும், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் உரிய ஆவணம் இன்றி ரொக்கம் கொண்டு சென்றது கண்டறியப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83.63,18-ம் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52.13,766-ம் என மொத்தம் ரூ.1.35,77,384 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை சி.விசில் செயலி மூலம் 201 புகார்களும், தொலைபேசி மூலம் 15 புகார்களும் 216 புகார்கள் வரபெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2024 3:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...