/* */

எம்.பி. ஜோதிமணி தர்ணா போராட்டம் வாபஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தை அடுத்து எம்பி ஜோதிமணி போராட்டம் வாபஸ்.

HIGHLIGHTS

எம்.பி. ஜோதிமணி தர்ணா போராட்டம் வாபஸ்
X

எம்பி ஜோதிமணி 24 மணி நேர தர்ணா போராட்டத்தை திரும்பப் பெற்று வருகிறார்.

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குவது தொடர்பாக முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு கரூர் ஜோதிமணி பலமுறை வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடந்து முடிந்துவிட்டது.

எனவே கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்தினால் மட்டும் திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு பங்கு பெற்ற பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியும் என கோரிக்கை வைத்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்படாததைக் கண்டித்து எம்பி ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பானது. நேற்று இரவு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரசார் படுத்து உறங்கினர். 24 மணி நேரத்தைத் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முகாமில் அமைக்க ஏற்பாடு செய்ய வழிவகை செய்யவுள்ளோம் என்று உறுதி அளித்ததின் பேரில் எம்பி ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளார்.

Updated On: 26 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  6. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  7. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  10. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை