/* */

விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணியினர் முயற்சி: கரூரில் பரபரப்பு

கரூரில், விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினரை, போலீசார் தடுத்து, சிலையை கைப்பற்றினர். இதனால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணியினர் முயற்சி: கரூரில் பரபரப்பு
X

கரூரில், பொது இடத்தில் இந்து முன்னணியினர் வைக்க முயன்ற விநாயகர் சிலைகளை, போலீசார் எடுத்துச் சென்றனர்.

கரூரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு, ஆட்சியர் அலுவலகம் மற்றும் கரூர் காவல் நிலைத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்து முன்னணி சார்பில், நான்கடி உயரமுள்ள இரண்டு விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு, கரூர் நகரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு முன்பு வந்தனர். அங்கு கோயில் முன்பும், வ.உசி வீதி அருகிலும் 2 சிலைகளையும் வைக்க முயன்றனர்.

தகவலறிந்து வந்த கரூர் நகர காவல்துறையினர், இரண்டு சிலைகளையும் பொதுஇடத்தில் வைக்க விடாமல் கைப்பற்றி, பசுபதீஸ்வரர் கோயிலில் வைத்தனர். அப்போது, இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து, கரூர் நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 9 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்