/* */

கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!

கரூரில் ஏழைகளின் வீடுதேடி சென்று இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
X

கரூரில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை , எளிய மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உணவு தேவைப்படுவோர் 9498747614 , 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கே இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த திட்டத்தை மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு தொடங்கி வைத்தார்.

3,307 நபர்கள் உணவுத்தேவை என்று தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தால் 3 வேளை ஊரடங்கு காலம் முடியும் வரை உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On: 30 May 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...