/* */

முன்னாள் படைவீரர்களுக்கு கரூர் ஆட்சியர் தங்கவேல் முக்கிய வேண்டுகோள்

நாடாளுமன்ற தேதல் பணி தொடர்பாக முன்னாள் படைவீரர்களுக்கு கரூர் ஆட்சியர் தங்கவேல் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர்களுக்கு கரூர் ஆட்சியர் தங்கவேல் முக்கிய வேண்டுகோள்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர், அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, விராலிமலை, மணப்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல்-2024-ல் சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி என்பது தேசத்திற்கு ஆற்றுகின்ற ஜனநாயக கடமை. தன்னலம் கருதாது தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள் மீண்டும் தேசப்பணியாற்றிட நல்வாய்ப்பாக கருதி தேர்தல் பணியாற்றிட, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள முன்னாள் இளநிலைபடை அலுவலர்கள்/ படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தினை” துணை இயக்குநர்,முன்னாள் படைவீரர்”நல அலுவலகம், 19ஏ. வார்னர்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட் திருச்சிராப்பள்ளி” அலுவலரை நேரில் அணுகி உரிய விருப்ப விண்ணப்பத்தினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 5 March 2024 3:02 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...