/* */

தமிழ் கடவுள் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கடவுள் வேடமணிந்த நாடக நடிகர்கள் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

தமிழ் கடவுள் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

கடவுள் வேடமணிந்து கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாடக நடிகர்கள்.

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து தமிழ் கடவுள் முருகன் மற்றும் சிவன் பார்வதி வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரூர் மாவட்டத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி 50 இருசக்கர வாகனங்களில் நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கலந்து கொண்டு நகரை சுற்றி இருசக்கர வாகனத்தை இயக்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதேபோல, காந்திகிராமம் பகுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து தமிழ் கடவுள் முருகன், சிவன், விஷ்ணு, பார்வதி, எமதர்மன் வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் ஒப்பனையுடன் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 9 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...