/* */

சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய வினாத்தாள்: எம்பி ஜோதிமணி கண்டனம்

புதிய கல்விக் கொள்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கு இது முன்னுதாரணம். மக்களவையில் இந்த பிரச்னையை எழுப்ப ஜோதிமணி திட்டம்.

HIGHLIGHTS

சிபிஎஸ்இ  தேர்வில் சர்ச்சைக்குரிய வினாத்தாள்: எம்பி  ஜோதிமணி கண்டனம்
X

மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயிடம் விசாரிக்கும்  எம்.பி ஜோதிமணி.

மத்திய அரசின் நிதியுதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் இன்று கரூர் நடைபெற்றது. இந்த முகாமை எம்பி. ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு தேர்வில் பிற்போக்குத்தனமான, குழந்தைகளை, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வினா கேட்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி சித்தாந்தத்தை திணிக்கும் வகையில் சிபிஎஸ்சி தேர்வில் வினாத்தாள் கேட்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக சிபிஎஸ்சியும், மோடி அரசும் திரும்ப பெற வேண்டும்.

புதிய கல்விக் கொள்கைளை என்ன வரப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இந்த வினாத்தாள் அமைந்துள்ளது. இதனால்தான் புதிய கல்விக் கொள்கை எதிர்க்கிறோம். இந்த மாதிரியான பெண்ணடிமை குழந்தைகளை அடிமைப்படுத்தி ஒரு பிற்போக்கு சிந்தனையை நடைமுறைப்படுத்துவதை ஒருபோதும் நாங்கள் இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம்.

பெண்களை ஒரு அடிமைப் பொருளாக வெறும் உடலாக ஒரு போகப்பொருளாக ஒரு அடிமையாக பார்க்கிற ஆர்எஸ்எஸ் பிஜேபி உடைய கற்கால சிந்தனைகளை ஏற்க முடியாது. பெண்கள் எத்தனையோ போராட்டங்களுக்கு இடையில் பல நூற்றாண்டுகளாக அடிமைத் தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படித்து, நம்பிக்கையுடன் சுய அடையாளங்களை மீட்டு வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது. இந்த பிரச்னையை மக்களவையில் எழுப்ப உள்ளேன் என பேட்டியளித்தார்.

Updated On: 13 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....