/* */

பேருந்துகள் இயங்கத் தொடங்கின - கோயில்களில் வழிபாடு தொடங்கியது

கரூர் மாவட்டத்தில் 55 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

HIGHLIGHTS

பேருந்துகள் இயங்கத் தொடங்கின -  கோயில்களில் வழிபாடு தொடங்கியது
X

கரூர் மாவட்டத்தில் 55 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட நான்கு பனிமனையில் உள்ள 205 பேருந்துகள் இயங்க தொடங்கின.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து கடந்த 55 நாள்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது.

தொற்று குறைந்த மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும் கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்த்து. இந்நிலையில், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கும் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, போக்குவரத்து கழக கரூர் மண்டலத்திலுள்ள கரூரில் இரண்டு கிளைகள், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய நான்கு கிளைகளில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளின் செயல்பாடுகளை பரிசோதிக்கப்பட்டன. பிரேக் உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளை மெக்கானிக்குகள் தீவிரமாக பரிசோதித்து தயார் செய்தனர்.

இதையடுத்து இன்று காலை . முதல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள் சாமி கும்பிட்டு பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.

பேருந்துகளில சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் கைகளை சுத்தம் செய்து கொண்டு பயணம் செய்யும்படி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அறிவுறுத்தினர்.பேருந்துகள் இயங்கத் தொடங்கியதும் குறைவான பயணிகளே பேருந்தில் பயணிக்கத் தொடங்கினர்.

Updated On: 5 July 2021 2:49 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  4. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  5. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!