/* */

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம் அடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவித்தனர்.

HIGHLIGHTS

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்
X

படகுகள் கடற்கறையில் நிறுத்தப்பட்டு இருக்கும் காட்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக ஆனி, ஆடி மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம், அதன் படி இந்த வருடமும் அவ்வப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவளம் கடற்பகுதியில் பலத்த கடல் சீற்றம் காரணமாக அங்குள்ள தூண்டில் வளைவு சேதமடைந்தது. இதன் காரணமாக நாட்டுப்படகுகளை நம்பி வாழும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடல்சீற்றம் மற்றும் பலத்த காற்று போன்ற நேரங்களில் தூண்டில் வளைவே தங்களுக்கு பாதுகாப்பு என கூறும் மீனவர்கள் தூண்டில் வளைவு சேதம் ஆனதால், ஏற்கனவே பல படகுகள் சேதம் அடைந்திருப்பதாக மீனர்வர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், பலமுறை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வந்து பார்த்தும் தூண்டில் வளைவு சீரமைத்து தர வில்லை எனக் கூறும் மீனவர்கள் உடனடியாக தூண்டில் வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 17 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...