/* */

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேரூர் பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

HIGHLIGHTS

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்
X

தேரூர் பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுக மற்றும் பாஜக வார்டு உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு காலி மனைகளுக்கான வரிவிதிப்பு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைகள் பொது மக்களை பெரிய அளவில் பாதிக்கச் செய்கின்றது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டம் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜக வார்டு உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக தேரூர் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை சரிபாதியாக குறைக்க வேண்டும், காலி மனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 12 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  3. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  5. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  6. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  7. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  9. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  10. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!