/* */

குமரியில் ஒரே நாளில் 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

குமரியில் போலீசாரின் வாகன சோதனையில் ஒரே நாளில் 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
X

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துகள் அதிகரித்து வந்தது.

இதனைத்தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய 2145 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

குமரியில் கடந்த ஒரு மாதத்தில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Updated On: 6 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு