/* */

கன்னியாகுமரி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் - எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி தொகுதியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் - எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் ஆய்வு
X

எம்.எல்.ஏ தளவாசுந்தரம் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் படி கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுவாமி தோப்பு பதி பகுதியில் தொடங்கி ஜெயம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தர்மபுரம், தெங்கம்புதூர், மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும், தோவாளை ஒன்றியத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை , திருப்பதிச்சாரம், திருமலைபுரம் போன்ற பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அப்போது சுவாமிதோப்பு பதி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள மழை நீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு இதனால் மழை நீர் தேங்கி சாலைகளில் சென்று பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து நெடுஞ்சாலைதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 5 Jun 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்