/* */

585 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை:எம்பி. எம்.எல்.ஏ க்கள் வழங்கல்

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 585 பயனாளிகளுக்கு பிரதமர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணையை எம்எல்ஏ, எம்பி, சேர்மேன் ஆகியோர் வழங்கினர்.

HIGHLIGHTS

585 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை:எம்பி. எம்.எல்.ஏ க்கள் வழங்கல்
X

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ௫௮௫ பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை எம்எல்ஏ, எம்பிக்கள் வழங்கினர்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழம்பியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சியில் உள்ள 585 பயனாளிகளுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பயணாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கூறுகையில், வீடு கட்டுவதற்காக பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் தரமான வீடுகளை மூன்று மாதத்தில் கட்டி முடித்து பயனடைய வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யாஇளமது,காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?