/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி செயலை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

Women Protest -காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகளின் செயலை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி செயலை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சியை  கண்டித்து பெண்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Women Protest -காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை நான்கு மண்டலங்களாக பிரித்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பகுதியான திருக்கால் என்னோடு பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குப்பை கிடங்கில் கொட்டி அங்கு தரம் பிரிக்கப்படுவது வாடிக்கை.

தற்போது வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வரும் செயலுக்கு மாநகராட்சி வரவேற்பு பெற்றுள்ளது. நகராட்சியாக இருந்த போதே இப்பகுதி தேர்வு செய்யப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

என்னோடு இப்பகுதிக்கு செல்லும் லாரிகள் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை கையாளுவது இல்லை. குப்பை லாரிகளை வலை போட்டு மூடி எடுத்துச் செல்ல அரசு அறிவுறுத்தியும் அதை செயல்படுத்தாமல் செல்வதால் இப்பகுதி முழுதும் குப்பைகள் சிந்தி மீண்டும் சாலையிலே விழும் நிலையில் உள்ளது.

மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் அருகில் செல்லும் நிலையில் அந்த கழிவு நீர் நிரம்பி தழும்பி சாலையில் கசிந்து கொண்டு செல்வதால் மீண்டும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிறது.

இந்நிலையில் திருக்காலிமேடு கவரை பகுதியில் அரசு துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. கவரை தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலையின் இரு புறமும் வசித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் செல்லும் நிலையில் லாரி அவ்வழியாக வந்து விபத்தை ஏற்படுத்தியதால் மாநகராட்சி மன்ற உறுப்பினரும் , துணை மேயருமான குமரகுருநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அப்பகுதி வழியாக லாரிகள் செல்ல தடை விதித்து கேட் அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று அந்த கேட் உடைக்கப்பட்டதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்ட போது நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர், ஆய்வாளர் ஆகியோர் இதை மேற்கொண்டதாக தெரிய வந்ததை கண்டித்து மக்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், குப்பை மற்றும் கழிவுநீர் லாரிகள் விதிகளை மீறி செயல்படுவதால் லாரிகளில் இருந்து சிதறி விழும் குப்பைகளை நாங்கள் மீண்டும் சேகரிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் குறுகிய சாலை என்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் மாநகராட்சி லாரியில் விபத்தில் சிக்கி பலியான போது சம்பவ இடத்தில் நாங்கள் மறியலில் ஈடுபட்ட போது மாநகராட்சி கேட் அமைத்து அப்பகுதியில் லாரிகள் செல்லாது என அறிவித்தது.

தற்போது மாநகராட்சி ஊழியர்களே இந்த செயலுக்கு அருகில் இருந்த வீட்டில் மின்சாரம் எடுத்து வெல்டிங் செய்து அப்புறப்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு