/* */

கட்டுமான பொருட்கள் விலை விர்ர்! கட்டுமானப் பணிகள் சர்ர்ர்

கட்டுமான பொருட்களின் நிலையற்ற விலையால் கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

கட்டுமான பொருட்கள் விலை விர்ர்!   கட்டுமானப் பணிகள் சர்ர்ர்
X

காஞ்சிபுரம் அருகே கிராமத்தில் கட்டப்பட்ட வீடு சில நாட்களாக நிறுத்தி வைக்கபட்ட நிலையில். 

கடந்த சில நாட்களாகவே கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் சதுர அடிக்கு ரூ.150 முதல் ரூ 200 வரை கூடுதல் செலவாகுது என வீட்டு உரிமையாளர் மற்றும் பில்டர்ஸ் ஆகியோர் அதிக கவலை அடைந்துள்ளனர்.

மாநகராட்சி பகுதிகளில் சதுர அடி ரூ.2400 நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 2300 செலவாகும் நிலையால் சற்று கட்டுமானத்தை தள்ளி வைத்துள்ளனர். இதனால், கட்டுமான தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு கவலை அடைந்துள்ளனர்.

இனி கட்டுமான பொருட்களின் விலையை கடந்த மாதத்தை விட இல்லை இல்லை, கடந்த வாரத்தை விட.. இல்லை, நேற்று போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

கம்பி டன்னுக்கு ரூ.15000 ஏறிவிட்டது... தற்போது விலை 85000/டன்னுக்கும், சிமெண்ட் மூட்டை ரூ.50 ஏறி தற்போது விலை 450 முதல் 470 வரை விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல் ஜல்லி விலையும் அவ்வாறே ஏறியுள்ளது. எலக்ட்ரிக்கல்,பிளம்பிங்,பெயிண்டிங் மற்றும் மர சாமான்கள் விலை 30% சதவீதம் முதல் 50% சதவீதம் வரை ஏறிவிட்டது. இதனால்தான் கட்டுமான தொகையையும் எற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

பத்து சதுரம் வீட்டுக்கு இன்று தோராயமாக மொத்த வேலைக்கும் கணக்கிட்டால் 24 முதல் 25 லட்சம் செலவாகும். இதை ஒரு பொறியாளர் ஒப்பந்தமாக எடுத்து செய்தால் 1.5 முதல் 2 லட்சம் லாபம் கிடைக்கலாம். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் அரிது. ஆகையால்தான் இப்போது நிறைய பொறியாளர்கள் அவருக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவுக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்யாமல் கன்சல்டிங் அடிப்படையில் வேலையை செய்து தர முன் வந்துள்ளனர்.

இது போன்ற கடின நிலையால் காஞ்சிபுரத்தில் கட்டுமானத் தொழில் கடந்த ஒரு வாரமாக கடும் சரிவு கண்டுள்ளது. நிலையற்ற விலையே இதுபோன்ற காரணம் எனவும் அதிக முதலீடு செய்ய இயலாது என கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் தங்கள் கொள்முதலை நிறுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 24 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!