/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1059 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி:ஆட்சியர் ஆர்த்தி

தடுப்பூசி செலுத்தியதில் காஞ்சிபுரம் முதன்மை மாவட்டம் எனினும் இரண்டாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  1059  சிறப்பு  முகாம்களில் தடுப்பூசி:ஆட்சியர் ஆர்த்தி
X

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ( பைல் படம்) 

காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (96.83 %) இலக்கையே எட்டியுள்ளது .

கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் ஆகும். இதுவரை 2,01,557 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குருஞ்செய்தி அனுப்பியும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதேப் போல கிராம வாரியாக ஆட்டோக்களின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் இறப்பை தடுக்க முடியும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஓவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன் கள பணியாளர்கள் மற்றும் 60 வயத்திற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி யையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.18 முதல் 59 வயதினருக்கு ஜீலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெவித்துள்ளார்.


Updated On: 5 Aug 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?