/* */

ரௌடி படப்பை குணா கூட்டாளிகள் இருவர் கைது: 4 கார்கள்‌ பறிமுதல்

ரவுடி படப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, மாம்பாக்கம் பிரபு ஆகியோரை கைது செய்து 4 கார்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ரௌடி படப்பை குணா கூட்டாளிகள் இருவர் கைது: 4 கார்கள்‌ பறிமுதல்
X

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியத்தை அழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையில் சிறப்பு அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ டி எஸ் பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து என நாற்பத்தி எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்டு இவருக்கு செக் வைத்தனர்.இவர் சென்னை புறநகர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி மேன் பவர் சப்ளை, கட்டுமான பொருட்கள் சப்ளை, ஸ்கிராப் போன்ற தொழில்களை செய்து வந்தார்.

மேலும் இவர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இவருக்கு உதவிய கூட்டாளிகளை கைது செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வந்தனர்.மேலும் படப்பை குணாவுக்கு உதவிய 38 போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்தது.

படப்பை குணாவின் மனைவி உட்பட பலரை போலீசார் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்தனர். என்கவுன்டரில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கடந்த 25ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து பூந்தமல்லி சிறையில் தற்போது இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே தனது கூட்டாளிகளின் மூலம் வெவ்வேறு பெயர்களில் தனது பினாமிகளையும் குட்டி தாதாக்களையும் வைத்து மீண்டும் ஆதிக்கம்செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதனை கண்டறிந்த சிறப்பு தனிப்படையினர் குணாவின் கூட்டாளிகளை களை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குணாவின் முக்கிய கூட்டாளியான மாம்பாக்கம் பிரபுவை கைது செய்தனர். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று நடித்து மருத்துவமனையில் இருந்து கொண்டே ரௌடி குணாவுக்கு உதவி செய்து வந்த காஞ்சி மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் போந்தூர் சேட்டு வை கைது செய்தனர். ஏற்கெனவே போந்தூர் சேட்டுக்கு சொந்தமான சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுவிடம் இருந்து நான்கு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக ரவுடி தான் கெத்து என்று ஸ்ரீபெரும்புதூரில் வலம் அந்த ரவுடிகளை கைது செயத்தன் மூலம் போலீஸ்தான் கெத்து என மீண்டும் நிருபித்த போலீஸாரின் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Updated On: 6 Feb 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!