/* */

மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் தொழிலாளர்கள் டிராக்டர் பேரணி

விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற கோரி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரங்கசாமி குளம் வரை பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் தொழிலாளர்கள் டிராக்டர் பேரணி
X

விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி டிராக்டர், இருசக்கர வாகன பேரணி நடைபெற்ற போது

காஞ்சிபுரம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான, மக்களுக்கும், தேசத்துக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய பாஜக மோடி அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத்த தலைவர் சாரங்கன் தலைமையில் முக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் , மாவட்ட செயலாளருக்கு நேரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், ஓய்வு பெற்றோர் நல சங்க நிர்வாகி ஓய்.சீத்தரராமன் விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் நந்தகோபால், சுகுமார், ஆனந்த், முருகேசன். மூர்த்தி (சிபிஜ), கே.செல்வம், வேணுகோபால் ஆகியோர் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு காந்திரோடு வழியாக ரங்கசாமிகுளம் பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது.

இதில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை கடன் வளையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.

மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை நிறுத்தி விவசாய பம்புசெட்டுகளுக்கு, ஏழை எளிய குடும்பத்திற்கும் சிறு தொழில்களுக்கும் வழங்கும் இலவச மின்சாரத்தை பறிக்காதே.

ணலக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை படுகொலை செய்த அஜய்மிஸ்ராடோனி மத்திய இணை அமைச்சர் முக்கிய குற்றவாளிகளை பதவி நீக்கம் செய்திட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையான இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Updated On: 27 Jan 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?