/* */

காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, அகற்றக் கோரி 21 ஆண்டுகளாக மக்கள் போராட்டம்

காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 21 வருடங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, அகற்றக் கோரி 21 ஆண்டுகளாக மக்கள்  போராட்டம்
X

காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது, மேட்டுத்தெரு பேருந்து நிலைய பகுதி. மாநில நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இதன் 10மீ தொலைவிலேயே அரசு மதுபானக்கடை கடந்த 21 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இக்கடையினை தாண்டி 30மேற்பட்ட குடும்பங்களுக்கு பிரதான வழியாக இப்பகுதி‌ உள்ளது.

இக்கடைக்கு அனுமதி பெற பல அரசு விதிகளை அரசு அலுவலர்களே தவறான வழிகளை கைபிடித்து உள்ளனர். மாநில நெடுஞ்சாலையிலிருந்து 10மீ என்பதும் , இக்கடைக்கு வரும் வழியை வேறுவழியாக பொதுவழியாக காட்டி விதிமீறல் செய்துள்ளனர். அவ்வழியே வந்தால் மதுக்கடைக்கு வழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மதுகடையால் குடியிருப்பு வாசல் முகப்பில் மதுபாட்டில்கள் , உணவுகள்‌ என அனைத்தும் வீசபடுகிறது. இது குறித்து புதிய மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து மனு அளித்துள்ளதாகவும், 21ஆண்டு போராட்டத்திற்கு இவராவது விடியல் தருவாரா? என் ஆவலுடன்‌ உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 24 Jun 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்