/* */

மாரத்தான் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு

100% வாக்கு பதிவினை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம்தேதி அன்று 2021சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு துறைகள் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவுகளில் கீழ் 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி ஆஸ்பிடல் சாலை, இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, மேட்டுத்தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

ஆண்கள், பெண்கள் பிரிவில் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Updated On: 13 March 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?