/* */

பாலாற்றில் தங்கி வெளிநாட்டவர் சிலர் பூஜை: காவல்துறையினர் அதிர்ச்சி

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புஞ்சைஅரசன்தாங்கல் பாலாற்று பகுதியில் வெளிநாட்டவர் சிலர் தங்கி பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பாலாற்றில் தங்கி வெளிநாட்டவர் சிலர் பூஜை: காவல்துறையினர் அதிர்ச்சி
X

பைல் படம்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற நோய் நிவர்த்தி ஆலயங்களும் , தொன்மை வாய்ந்த வரலாற்று ஆலயங்களும் அமைந்துள்ளது. இதனைக் காணவும் திருக்கோயிலில் தரிசனம் மேற்கொள்ளவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிவது உண்டு.

இது போன்று வருபவர்கள் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாது, பிற மாநிலத் தரும் காஞ்சியை காசிக்கு அடுத்தபடியாக தரிசிப்பது உண்டு. பல்லவர் கால கட்டிடக்கலையை ரசிப்பதற்கு வெளிநாட்டவர்கள் நவம்பர் மாதம் முதல் சுற்றுலாவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு அதிக அளவில் வருவது உண்டு.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களின் கட்டடக் கலைகளை கண்டு களிக்கவும், மாமல்லபுரம் குடைவரை கோயில் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை தங்கி இருந்து கண்டு களித்து தங்கள் நாடுகளுக்கு ஜனவரி மாதம் இறுதியில் செல்வது வழக்கம்.

இது மட்டும் இல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் தொகுப்பாக மாமல்லபுரத்தில் நடைபெறும் நாட்டிய விழாவிற்காகவே ஆண்டுதோறும் பல நாட்டினர் அங்கு கூடுவது உண்டு.

காஞ்சிபுரம் மட்டுமில்ல அது தற்போது ஆன்மிகத்திலும் அதிக அளவில் பொதுமக்கள் செல்லும் இடமாக திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

மேலும் கிரிவலப் பாதையில் சுற்றிலும் பல்வேறு சித்தர்களின் ஆசிரமம் உள்ளதால் தியானத்திற்காகவும் பெருமளவில் வெளிநாட்டவர்கள் அங்கு வருவது உண்டு.

இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான புஞ்சைஅரசன்தாங்கல் கிராம ஊராட்சியை ஒட்டி பாலாற்று படுகை அமைந்துள்ளது. கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழை அதனை தொடர்ந்து மாண்டாஸ் புயல் காரணமாக தற்போது வரை பாலாற்றில் நீர் செல்கிறது.

இந்த பாலாற்று கரையினை ஒட்டி உள்ள பகுதியில் சில வெளிநாட்டவர்கள் நேற்று முதல் கூடாரம் அமைத்து தங்கியிருந்து பூஜை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி வழியாக சென்ற சிலர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அப்பகுதிக்கு சென்ற தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த், அங்கு இருந்த வெளிநாட்டவர் குறித்து கேட்டறிந்தார்.

அவர்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் பாலாற்றங்கரையோரம் உள்ள நீர் செல்வதால் இப்பகுதியில் நேற்று தங்கியிருந்ததாகவும், இன்று சிறுபூஜை மேற்கொண்டு விட்டு தற்போது கிளம்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை உறுதி செய்த காவல் ஆய்வாளர் அவர்களை உடனடியாக இப்பகுதியில் இருந்து செல்லுமாறும் , சட்டம் ஒழுங்கு குறித்து அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் ஆன்மிக பயணத்திற்கு வழி காட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 24 Jan 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு