/* */

காஞ்சிபுரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டுவிட்டு தப்பியோடிய கூட்டு கொள்ளையர்கள் 6 பேரை சம்பவம் நடந்த 24மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைது
X

பெட்ரோல் பங்கில் ஊழியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற காட்சி

காஞ்சிபுரம் - வேலூர் புறவழி சாலை கீழ்கதிர்பூர் என்கிற பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. இங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு ஐந்து இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.பெட்ரோல் பங்கில் படுத்திருந்த ஊழியரிடம் திருவண்ணாமலை பருவதமலை செல்ல வழி கேட்டனர்.ஊழியர்களும் அவர்களுக்கு தெளிவான பதிலை அளித்தனர் .

திடீரென வந்து இருந்த 6 பேரும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக துணிந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் என்ற பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்ட துவங்கினர்.

மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பெட்ரோல் பங்கை நோக்கி ஓடிவந்தனர். இதைக்கண்ட கொள்ளையர்கள் 3 பேர் ஒரு பைக்கில் தப்பிச் சென்றனர்.மற்ற இருவர் தப்பி செல்லும் பொழுது ஊழியர்கள் மறித்ததில் பைக்கை விட்டுவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர் .

பெட்ரோல் பங்கில் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பங்கில் கொள்ளையடிக்க முயன்ற 5 நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

நிலையில் வேகவதி பாலம் அருகே நின்றிருந்த மூன்று நபர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சென்னையை சேர்ந்த ஜெகன்ராஜ்(20),இமானுவேல்(18),பிரவின்(18) ஆகிய 3 பேரும் பெட்ரோல் பங்கில் உடன் நண்பர்கள் உடன் ஐந்து பேராக வந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

அவர்கள் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கொள்ளையடிப்பது வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையெடுத்து மீதமுள்ள சதிஷ்(23),பாலாஜிராஜா(19) மதியழகன் (18) ஆகிய மூன்று பேரை தேடி வந்த நிலையில் நேற்று மாலை கீழம்பி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த போது போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பெட்ரோல் பங்க்கில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது.

இவர்களை கைது செய்த போலீசார் 3இரு சக்கர வாகனம்,பட்டா கத்தி ஆகியவற்றினை பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள் ஸ்ரீபெரும்புதூர்,சுங்குவார்த்திரம் மற்றும் ஒரு சில இடங்களிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்ற 24மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை சுற்றிவளைத்து போலீசார் பிடித்து கைது செய்தது குறிப்பிடதக்கது.

Updated On: 23 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்