/* */

தமிழ் மொழியில் எழுத்துப் பிழையின்றி அச்சிட வேண்டும்: எம்எல்ஏ எழிலரசன்

அச்சுத் துறையின் எதிர்காலம் குறித்த தேசிய கருத்தரங்கம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய தலைவர் ரவிந்திர ஜோஷி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்  மொழியில் எழுத்துப் பிழையின்றி அச்சிட வேண்டும்: எம்எல்ஏ எழிலரசன்
X

அச்சுத்துறையின் எதிர்காலம் குறித்த தேசிய கருத்தரங்கு விழா மலரை வெளியிட்ட அகில இந்திய சங்கத் தலைவர் ரவீந்திர ஜோஷி, அதனைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்

தற்போதைய காலகட்டத்தில் அச்சகத் தொழில் விஞ்ஞான காலகட்டத்திற்கு ஏற்ப தற்போது மாறிவரும் சூழ்நிலையில் அதன் எதிர்காலம் குறித்த தேசிய கருத்தரங்கு காஞ்சிபுரத்தில் ரொமான்சிங் பிரிண்ட் 2023 என்ற தலைப்பில் காஞ்சிபுரம் சித்தி ஈஸ்வரர் மகாலில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மாநில செயலாளர் துரை குமரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 37 மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளர்கள் இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய அச்சக உரிமையாளர் நல சங்க தலைவர் ரவீந்திர ஜோஷி மற்றும் பொருளாளர் பொதுச் செயலாளர் ராகவேந்திரா தத்தா பருவா, பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் மன்ற தலைவர் செந்தில்குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


மேலும் இதில் அச்சு தொழில் இணைய வழியில் எவ்வாறு மேம்படுத்துவது, பிரின்டிங் தொழில் எதிர்காலம் குறித்த வாய்ப்புகள், பிரிண்டிங் தொழிலில் சமீபத்திய போக்குகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பல்துறை நிபுணர்கள் உரையாற்றினர்.

இதில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், கடந்த காலத்தில் அச்சகத்துறை கோர்வை செய்து எழுத்துக்கள் பிழையின்றி தமிழ் மொழியை வளர்க்கும் அளவில் செயல்பட்டு வந்ததும், தற்போதைய விஞ்ஞான கால உலகில் நவீன இயந்திரங்களைக் கொண்டும் கணினி கொண்டும் பத்திரிகையை உருவாக்குவதும், அதன் சார்ந்த செயல்பாடுகளை செய்யும் போது தமிழ் எழுத்துக்களின் கவனம் அதிகம் கொள்ள வேண்டும் எனவும், வார்த்தைகள் பிழையின்றி வரும் நிலையில் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது ஐயமில்லை என்று கூறினார்

மேலும் அவர் கூறுகையில், அச்சகத் துறையில் புதிய தொழில்நுட்பகளை தற்போதைய அச்சக உரிமையாளர்கள் கற்றுணர்ந்து தங்களை அதிகளவில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும், பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்த கல்வியை தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்து எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய கல்வியை பயில முயல வேண்டும் என கூறினார்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் மாணிக்கம் குமரவேல் துணைத்தலைவர் குமாரசாமி மற்றும் நல சங்க உறுப்பினர்கள் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.


நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் குறித்த கண்காட்சி அச்சக உரிமையாளர்கள் பார்வையிட்டு அது குறித்த சந்தேகங்களை கேட்டுப் பெற்றனர்.

Updated On: 19 March 2023 1:45 PM GMT

Related News