/* */

காஞ்சிபுரத்தில் புகைப்படத்துடன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 6,43,747ஆண் வாக்காளர், 8,78,224 பெண் வாக்காளர், 181 இதர என மொத்தம் 13,22,152 வாக்காளர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் புகைப்படத்துடன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகைப்படத்துடன் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பெற்றுக்கொண்டார். அருகில்  வட்டாட்சியர்கள் உள்ளனர்.

Kanchipuram News in Tamil -தமிழகம் முழுதும், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரகாஷ் சாஹூ அறிவித்தார் தமிழகத்தில், இன்று முதல் ஒரு மாதத்திற்கு, புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது.

இதற்காக இன்று காலை 10:00 மணிக்கு, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வார்டு வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பம் அளிக்கலாம்.இம்மாதம் 12, 13, 26, 27ம் ஆகிய நான்கு தேதிகளில் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும்.

இம்முகாம்களில், வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடக்கும். இம்முறை, 17 வயதான இளைஞர்களும், இளம்பெண்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 2023 க்கான, வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பெற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்றைய தேதியில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 747 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 78 ஆயிரத்து 2224 பெண் வாக்காளர்களும் இதர பாலினம் எண்ணிக்கையில் 181 வாக்காளர்களும் என மொத்தம், மாவட்டத்தில் 13 லட்சத்து 22,152 வாக்காளர்கள் உள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது.

மேலும் 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர் கொண்ட வாக்கு சாவடி மையங்களை கண்டறிந்து, வாக்காளர்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவற்றில் மற்றொரு புதிய வாக்கு சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1394 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 82 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 621 பெண் வாக்காளர்களும் , 19 இதர பாலினம் எனவும் மொத்தம் 3 லட்சத்து, 10 ஆயிரத்து 722 வாக்காளர்கள் உள்ளனர்.

இதே போல், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1,28, 157 ஆண் வாக்காளர்களும் , 1,60,621 பெண் வாக்காளர்கள், 46 இதர பாலினம் என 2,66,028 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தனி தொகுதியில் 1, 76,753 ஆண் வாக்காளர்களும் , 1,86,754 பெண் வாக்காளர்கள், 61 இதர பாலினம் என 3,63,568 வாக்காளர்கள் உள்ளனர். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,88,755 ஆண் வாக்காளர்களும், 1,93,024 பெண் வாக்காளர்கள், 55 இதர பாலினம் என 3,81,834 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்கு சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதவி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் அலுவலக நேரங்களில், இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி , வட்டாட்சியர்கள் பிரகாஷ், லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்