/* */

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் 100-வது நாளை எட்டியது

Today Protest News -காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட உள்ள 2-வது பசுமை விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது.

HIGHLIGHTS

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்  100-வது நாளை எட்டியது
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்கு பணிக்காக ஏராளமான போலீசார் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.

Today Protest News -சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இரண்டாவது பசுமை விமான நிலையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசு ஒத்துழைப்புடன் செயல்பட திட்டமிட்டது.

இதற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அதையொட்டி உள்ள 13 கிராமங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

இந்த அறிவிப்பு அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என கையகப்படுத்தப்படும் என தெரியவந்தது. மேலும் சுமார் 4800 ஏக்கர் பரப்பளவு இந்த இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு தேவை என்பதால் இவை கணக்கெடுப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதை எதிர்த்து ஏகனாபுரம் பரந்தூர் உள்ளிட்ட அனைத்து கிராம பொதுமக்களும் நாள்தோறும் நள்ளிரவில் ஒன்று கூடி விவசாய நிலங்களை தர மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தாண்டு நடைபெற்ற மூன்று கிராம சபை கூட்டங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர்.இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேலும் ஏகனாபுரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கும் வித்தியாசமான போராட்டத்தையும் நடத்தினார்கள்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கிராமத்தில் இருந்து எழுச்சியாக நடைபயணமாக சட்டமன்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது கண்டு தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு , தா.மோ.அன்பரசன் தலைமையில் முக்கிய கிராம நிர்வாகிகளுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு கோட்டை நோக்கி பேரணியாக செல்ல இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கிராம போராட்ட குழு சார்பில் அறிவிக்கப்பட்டு நாள்தோறும் நடைபெறும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் நாளை 100 வது நாளை எட்ட உள்ளது. ஏற்கனவே போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதி முழுவதும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி அப்பகுதிகள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை 100 வது நாள் போராட்டம் நடைபெறும் நிலையில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் மற்றும் பரந்தூர் விமான நிலைய போராட்டம் என உள்ளதால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் பணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 11:54 AM GMT

Related News