/* */

காஞ்சிபுரம் பகுதியில் காடாக மாறிவரும் பாலாறு; விவசாயிகள் வேதனை

காஞ்சிபுரத்தில் பாயும் பாலாறு அடர்ந்த வனப் பகுதியாக மாறி வருவது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பகுதியில் காடாக மாறிவரும் பாலாறு; விவசாயிகள் வேதனை
X

குருவிமலை அருகே செல்லும் பாலாற்றின் பாதி காடாக மாறியுள்ள காட்சி. 

பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள மாமல்லபுரம் அடுத்த வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றால் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தடுப்பணைகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. பாலாறு பாயும் இப்பகுதிகள் அனைத்தும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அகலம் கொண்டதாகும்.

இந்த பாலாற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இந்த மணல் குவாரியில் மணல் அள்ள அரசு தடை விதித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை பகுதியில் உள்ள பாலாறு தற்போது அடர்ந்த காடாக உருமாறி வருகிறது. இதில் பனை, தென்னை, சீமைக் கருவேலம் என அனைத்து வகையான மரங்களும் வேரூன்றி அடர்ந்த வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது.

ஒரு கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாலாற்றின் பாதி வரை அடர்ந்த வனப்பகுதி போல் உருமாறி வருவதால், வரும் வடகிழக்கு பருவ மழையின் போது நீர் வரத்து ஒரு பகுதியாக விலகி செல்லும். இதனால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும், மேலும் நீர் ஆதாரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இதனை உரிய முறையில் கையாண்டு பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் பலர் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

Updated On: 20 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்