/* */

காஞ்சிபுரத்தில் 15 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று நீக்கம்

இந்த ஆண்டுக்கான பள்ளி வாகனங்கள் ஆய்வில் மொத்தம் 202 வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டதில் 128 வாகனங்கள் தகுதி பெற்றது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 15 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று நீக்கம்
X

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 15 பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று நீக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் வேன்கள் உள்ளிட்டவைகளை தனியார் பள்ளி நிர்வாகங்கள் பயன்படுத்தி வருகிறது.

பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 44 தனியார் பள்ளிகளின் 250 பேருந்துகள் மற்றும் வேன்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள அழைப்பாணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் சிறப்பு முகாமில் காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜீலியட் சீசர் முன்னிலையில் தனியார் பள்ளி வாகனங்களில் இருக்கைகள், அவசர உதவி கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு உபகரணத்தை பரிசோதிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்.

இதில் மொத்தம் 202 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்ட நிலையில் சிறிய குறைபாடுகள் உள்ள 59 வாகனங்கள் மீண்டும் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டது.

15 வாகனங்கள் தகுதி சான்று நீக்கம் செய்யப்பட்டு முறையாக அனைத்து பணிகளும் நிறைவு செய்த பின் ஆய்வுக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டது.

128 வாகனங்கள் முழுமையான தகுதி சான்று பெற்று பள்ளி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

இன்னும் இரு வார காலம் அவகாசம் உள்ளதால் அதற்குள் மீண்டும் குறைகளை நிறைவு செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 24 May 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...