/* */

நல வாரியம் அமைக்க கோரி ஊரக தொழில் துறை அமைச்சரிடம் மின்னணு,மின் தொழிலாளர்கள் மனு

அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பராமரிப்பு வேலைகளையும் அளித்தால் வாழ்வாதாரம் சிறக்கும் எனவும் கோரிக்கை

HIGHLIGHTS

நல வாரியம் அமைக்க கோரி ஊரக தொழில் துறை அமைச்சரிடம் மின்னணு,மின் தொழிலாளர்கள் மனு
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒரு கோடி மதிப்பீட்டில் 1632 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இவ்விழாவில், தமிழ்நாடு மின்னணு மற்றும் மின் தொழிலாளர் வடக்கு மண்டல சங்கம் சார்பில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்னணு மற்றும் மின் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்களின் வாழ்வாதாரம் காக்க புதிய தனி நல வாரியம் அமைக்க கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர்.

மேலும், அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பராமரிப்பு வேலைகளையும் தங்களுக்கு அளித்தால், வாழ்வாதாரம் சிறக்கும் எனவும் கோரிக்கை வைத்தனர். இம்மனு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சங்க நிர்வாகிகளிடம் ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்தார்.

Updated On: 30 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?