/* */

மாமல்லபுரத்தில் வாகன கட்டணத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ.பாலாஜி கோரிக்கை

சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பார்வையிட வரும் வாகனங்களுக்கு கட்டணம் ரத்து செய்ய பாலாஜி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

HIGHLIGHTS

மாமல்லபுரத்தில் வாகன கட்டணத்தை ரத்து செய்ய  எம்.எல்.ஏ.பாலாஜி கோரிக்கை
X

 மாமல்லபுரம் கடற்கரை கோயில் ( பைல் படம்) .

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மண்டல அளவில் ஆன வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கைகள் தெரிவிக்கலாம் என அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி பேசினார்.

இதில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் பேருந்து நிலையத்தை புனரமைத்து தரும்படியும் , திருக்கழுக்குன்றம் பகுதியில் மீன் மார்க்கெட் , பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் பல்வேறு இடங்களில் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் , வாகனங்களுக்கு தேவையான நிறுத்துமிடம் இல்லாமல் சாலையிலே நிறுத்துவதற்கு எதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி அதை முறைப்படுத்த வேண்டும் . கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தையும் ரத்து செய்து முறையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

திரூப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதிப்படுத்தி அதனை அமைச்சர் கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


Updated On: 18 Aug 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!