/* */

நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மீட்கப்பட்டு 71 முகாம்களில் 2610 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
X

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள  நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி உடன் ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கனமழை காரணமாக நிவாரண முகாம் அமைக்கப்பட்டு தங்கியிருப்பவர்களுக்கு தேவையான பாய், போர்வை மற்றும் உணவுகள் ஆகியவற்றை வழங்கி, மழைநீர் வடிகால் பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, தாழ்வான பகுதியில் குடியிருந்த இருளர் குடியிருப்பை சேர்ந்தவர்களுக்கும்,

காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நிவாரண முகாம் மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, அங்கு தங்கி உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து ஓரிக்கை மெயின் ரோடு வேளிங்கைபட்டறை பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய், காமாட்சி அம்மன் காலனியில் மழைநீர் தேங்கி உள்ள பகுதியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றினை தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 4 Dec 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?