/* */

மழை நீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற எம்எல்ஏ மற்றும் மேயர் அறிவுரை.

காஞ்சிபுரத்தில் நேற்று ஒரு மணி நேரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பெய்ததில் நகரின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

மழை நீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற  எம்எல்ஏ மற்றும் மேயர் அறிவுரை.
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாத்தான்குட்டை தெருவில் உள்ள கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற பொறியாளர் குழுவிற்கு அறிவுறுத்திய எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ்.

காஞ்சிபுரத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் வீடுகள் மற்றும் தெருக்களில் சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்படும் பகுதிகளை எம் எல் ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் கால்வாய்ளில் உள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

தமிழகம் முழுவதும் வரும் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை காஞ்சிபுரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து ஒரு மணி நேரம் 13 சென்டிமீட்டர் கன மழை பொழிந்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளை ஆறாக ஓடியது.

பல பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியும் வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை அளித்தது.

இதுகுறித்து அறிந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ராஜ் உடனடியாக மாநகராட்சி பொறியாளர் குழுவுடன் அப்பகுதியை ஆய்வு செய்து மின் மோட்டார் மூலம் நீர் இறைக்கும் கால்வாயில் தூர்வாரியும் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்தது.

மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதனை சீரமைக்க ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எழிலரசன் , மேயர் மகாலட்சுமி யுவராஜ் , ஆணையர் கண்ணன் மற்றும் பொறியாளர் குழுவினர்

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மேயர் இன்று பாண்டவர் பெருமாள் கோயில் தெரு, சாத்தான்குட்டை தெரு, பாவாதெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்றவும், ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றி மழை நீர் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பொறியாளர் குழுவிற்கு அறிவுரை வழங்கினர்.

பொதுவாக இது போன்ற மழைக் காலங்களில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய்களில் கழிவுகளை அகற்றினாலும் , பொதுமக்கள் மீண்டும் மீண்டும் கழிவுகளை மழை நீர் கால்வாய்கள் மற்றும் சாலைகளில் வீசுவதால் இது போன்று ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இது தனக்குத் தானே சிரமங்களை ஏற்படுத்திக் கொள்வதுமாக உள்ளதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர் குழுவினர், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் , திமுக பகுதிக்கு செயலாளர் திலகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?