/* */

மாசி பிரம்மோற்சவம் : இரண்டாம் நாள் மகர வாகனத்தில் காமாட்சி எழுந்தருளல்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் பகல் மகரம் வாகனத்தில் 4ராஜவீநிகளில் அம்பாள் திருவீதியுலா

HIGHLIGHTS

மாசி பிரம்மோற்சவம் : இரண்டாம் நாள் மகர வாகனத்தில் காமாட்சி எழுந்தருளல்
X

இரண்டாம் நாள் காலை மகரம் வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சியம்மன்

சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ப்லவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் நேற்று கொடி ஏற்றத்துடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துவங்கியது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும் , வண்ண மலர் மாலைகளாளும் , அலங்கரிக்கபட்டிருந்தது.

பிரம்மோற்சவ விழாவின் இன்று இரண்டாம் நாள் காலை மகரம் வாகனத்தில் காமாஷி , லஷ்மி , சரஸ்வதியுடன் மனோரஞ்சித மலர்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Updated On: 9 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!