/* */

மாற்றுத்திறனாளி, வயதானவரிடம் கனிவு- காஞ்சிபுரம் அலுவலர்களின் பணிவு

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி, முதியோர் உள்ளிட்டோரிடம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கனிவுடன் வேட்பு மனுவை பெற்ற நிகழ்வு, பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி, வயதானவரிடம் கனிவு- காஞ்சிபுரம் அலுவலர்களின் பணிவு
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளியை தேடி வந்து வேட்புமனு பெற்ற அலுவலர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 5ஓன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய, மாற்று திறனாளிகள், கர்ப்பிணிகள் , வயது மூத்தோர் என பல தரப்பு மக்கள் வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில், கீழ்தளம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் , முதல் தளத்தில் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் அலுவலர்கள் என, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, மிகுந்த இடைவெளியுடன் தாக்கல் செய்யும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மனு அளித்தபோது எழுந்து நின்று வேட்புமனுவை பெற்ற, உதவி தேர்தல் அலுவலர்.

காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில், மூத்த குடிமக்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தால், அவர்களுடன் கனிவுடன் பெற்று தேர்தல் விதிகளை அதிகாரிகள் கூறி வருகின்றனர். அவர்களின் இந்த செயல்பாடு, பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு தேநீர், சுத்திகரிப்பு குடிநீர் என கீழ்தளத்தில், நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. கழிவறை தொடர்ந்து கிரிமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

மாற்றுட திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் எவரேனும் வேண்டுகோள் வைத்தால் அவர்களிடத்திலேயே சென்று வேட்புமனுவை ஏற்கின்றனர். மூத்த குடிமக்கள் வேட்பு மனு அளித்தால் எழுந்து நின்று மரியாதை அளிக்கும் வகையில் வாங்குவது போன்ற இச்செயல், உடன் வருபவர்கள் மத்தியில் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. அதிகாரிகளின் இந்த செயல், பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 20 Sep 2021 2:45 PM GMT

Related News